ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்தவர் சுப்ரதீபன் (21), (கூலி தொழிலாளி)
சுப்ரதீரன் கடந்த மாதம் அடிதடி வழக்கு சம்பந்தமாக அந்தியூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார், அந்தப் புகாரில் உண்மைதன்மை இல்லை என போலீசார் கூறி கடந்த வாரம் புகார் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது ,
FAST INDIA NEWS 100
ஏரிக்கு வரும் நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
👇👇👇👇👇👇👇👇👇
இந்நிலையில் சுப்ரதீபன் இன்று மதியம் வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுப்ரதீபன் இறப்பிற்கு காவல்துறை தான் காரணம் எனக் கூறி அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் அவரது உறவினர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஸ்தூரி சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன். மேகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
FAST INDIA NEWS 100
ஏரிக்கு வரும் நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய பலமுறை கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் விவசாயிகள் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
👇👇👇👇👇👇👇👇👇
இந்த சாலை மறியலால் அந்தியூர் பர்கூர் ரோடு அந்தியூர் புதுக்காடு ரோடு ஆகிய பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

அந்தியூர் செய்தியாளர்
பா.ஜெயக்குமார்.
Leave a comment